

மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள எம்.வேட்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூக்கி (வயது 65). இவர் எம்.வேட்ரப்பட்டி கிராமத்தில் இருந்து மொரப்பூருக்கு வந்தார். அப்போது அங்குள்ள தண்டவாளத்தை கடந்தபோது சென்னையில் இருந்து சேலம் சென்ற சரக்கு ரெயில் மூதாட்டி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மொரப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.