மக்களை தேடி மருத்துவம்: 2 நாட்களில் 13,247 பேர் பயன் அடைந்துள்ளார்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்களை தேடி மருத்துவம் திட்டம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை:

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கடந்த 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டப்படி சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கு வீடு வீடாக சென்று 2 மாதங்களுக்கு ஒருமுறை தேவையான மருந்து-மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

அதே போல் பிசியோ தெரபி, டயாலிசிஸ் சிகிச்சைகளும் வீடு வீடாக சென்று அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள இந்த திட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் 13,247 பேர் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அவர்களில் 3,772 பேர் சர்க்கரை நோயாளிகள், 5,816 ரத்த அழுத்த நோயாளிகள், இரண்டும் சேர்ந்தவர்கள் 2,768 பேர் ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com