

சென்னை:
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நவம்பர் 18-ந் தேதி தொடங்கியது.
முதலில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நவம்பர் 23-ந் தேதி தொடங்கியது. டிசம்பர் 10-ந் தேதி முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஜனவரி 4-ந் தேதி முதல் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வருகிற 4-ந் தேதி மருத்துவ கலந்தாய்வு நடக்கிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இன்னும் 12 இடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து அந்த 12 இடங்களுக்கான கலந்தாய்வில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் பங்கேற்கலாம்.
ஜனவரி 5-ந் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெற உள்ளது.