நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி

நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

மேலூர்:

சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி அருகே உள்ள அழகிச்சிப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 39). இவர் மேலூர் அருகே ஆட்டுக்குளத்தில் உள்ள ஒரு தனியார் கியாஸ் சிலிண்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1-ந்தேதி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

நாய்த்தான்பட்டி எனும் இடத்தில் சென்றபோது நாய் ஒன்று ரோட்டின் குறுக்கே பாய்ந்தது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சுதாகர் படுகாயம் அடைந்தார்.

பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com