

வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் சூர்யவர்மா(வயது24). இவர் சென்னை மாநகர காவல்துறையில் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கும் வாழப்பாடி அருகே தனியார் பொறியியல் கல்லூரிக்கு, கடந்த ஆண்டு தேர்வு எழுத வந்த கடலூர் பகுதியைச் சேர்ந்த சற்குணா ( வயது 24) என்ற இளம்பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கணவர் சூர்யவர்மா, தனது மனைவியை பெற்றோர் வீட்டில் இருந்து நகை, பணம் வாங்கி வா எனக்கூறி தொந்தரவு செய்துள்ளார். கடந்த பிப்ரவரி 16-ந் தேதி மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்து, வீட்டை விட்டு விரட்டி அடித்தார். இவரது பெற்றோர் மற்றும் சகோதரர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
இதனையடுத்து கணவர் சூரியவர்மா (23), மாமனார் சரவணன் (47), மாமியார் கீதாலட்சுமி (45), கொழுந்தன் சேதுபதி(21) ஆகியோர் மீது சற்குணா வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.