கள்ளக்காதலனுடன் மனைவி சென்றதால் லாரி மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை

பரமத்திவேலூர் அருகே கள்ளக்காதலனுடன் மனைவி சென்றதால் வேதனை அடைந்த லாரி மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்குமார் (வயது 49). லாரி மெக்கானிக். இவருடைய மனைவி சுமதி (40). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் சுமதிக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவர் ‌மற்றும் 2 மகன்களையும் தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் சுமதி சென்றுவிட்டாராம். அன்றில் இருந்து வேதனை அடைந்த நிலையில் இருந்த அருள்குமார் 2 மகன்களையும் தனது அக்காள் பாரதி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் தனியாக வீட்டில் இருந்து வந்த அருள்குமார் நேற்று முன்தினம் காலை படுக்கை அறைக்கு சென்றவர் பின்னர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது மின்விசிறியில் அருள்குமார்‌ சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அருள்குமாரின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து போலீசார்‌ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com