லால்குடியை அடுத்த ஆதிகுடியில் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

லால்குடியை அடுத்த ஆதிகுடியில் வேகத்தடையை சீரமைத்து மீண்டும் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
சாலை மறியல்
Published on

லால்குடி:

லால்குடி அடுத்த ஆதிகுடியில் சென்ற மாதம் தமிழக முதல்-அமைச்சர் வருகையையொட்டி லால்குடி - அன்பில் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனையடுத்து வேகத்தடையை சீரமைத்து மீண்டும் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த லால்குடி இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பகுதியில் மீண்டும் வேகத்தடை அமைத்து கொடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com