குப்பம் அருகே இளம்பெண் தற்கொலை

குப்பம் அருகே திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஸ்ரீகாளஹஸ்தி:

சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலம் டி.கே. பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரின் மகள் தீட்ஷிதா (வயது 20). இவர், குப்பம் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு பெற்றோர் பொங்கல் பண்டிகைக்கு பிறகு திருமணம் செய்ய முடிவெடுத்தனர். ஆனால் அவர், தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், தற்போது திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்றும் கூறி வந்தார்.

எனினும் வருகிற 15-ந்தேதி இளம்பெண் தீட்ஷிதாவுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் அறையில் தீட்ஷிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுரிசங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com