கூத்தாநல்லூர் அருகே கார் மோதி மூதாட்டி படுகாயம்

கூத்தாநல்லூர் அருகே கார் மோதி மூதாட்டி படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து காயம்
விபத்து காயம்
Published on

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள அதங்குடி ஜீவா தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி அன்னக்கிளி (வயது70). நேற்று முன்தினம் மாலை அன்னக்கிளி கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் அன்னக்கிளி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அன்னக்கிளி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com