கொளத்தூர் அருகே விபத்தில் மூதாட்டி பலி

கொளத்தூர் அருகே விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

கொளத்தூர்:

கொளத்தூரை அடுத்த கண்ணாமூச்சியை சேர்ந்தவர் பெருமாள். விவசாயி. இவருடைய மனைவி ரத்தினம்மாள் (வயது 60). இந்த நிலையில் நேற்று ரத்தினம்மாள், தனது மகன் பூபதியுடன் (36) மோட்டார் சைக்கிளில் கண்ணாமூச்சி அடுத்த வேதப்பாலி என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தார். பூபதி மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த மினி வேன் ஒன்று பூபதி ஓட்டிசென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரத்தினம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். பலத்த காயமடைந்த பூபதி, மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com