தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா சுயசார்பு அடைந்துள்ளது- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்பு இந்தியாவின் சின்னம் மட்டுமல்ல, அதன் சுய பெருமையின் அடையாளம் என பிரதமர் மோடி பேசினார்.
பிரதமரின் மன் கி பாத் உரை
பிரதமரின் மன் கி பாத் உரை
Published on

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடன் கலந்துரையாடுகிறார். அவ்வகையில் இந்த ஆண்டின் முதல் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்த சங்கடம் நிறைந்த வேளையில், இந்தியாவால் எப்படி உலகிற்கு சேவையாற்ற முடிகிறது என்றால், நம் நாடு இன்று மருந்துகள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பில் வல்லமை பெற்றிருக்கிறது, சுயசார்பு அடைந்திருக்கிறது என்பதால்தான். பல்வேறு நாடுகளின் குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் இந்தியா குறித்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வருகின்றனர். 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்பு இந்தியாவின் சின்னம் மட்டுமல்ல, அதன் சுய பெருமையின் அடையாளமாகும். நாம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை மேற்கொள்வது மட்டுமல்லாமல், நமது குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதில் மிக வேகமாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com