விமான விபத்தில் விமானப்படை விமானி பலி- விசாரணைக்கு உத்தரவு

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் இந்த ஆண்டில் விபத்துக்குள்ளாவது மூன்றாவது முறை ஆகும்.
விபத்து நடந்த பகுதி
விபத்து நடந்த பகுதி
Published on

மோகா:

பஞ்சாப் மாநிலம் மோகா அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்21 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. ராஜஸ்தானின் கங்கா நகர் மாவட்டத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் ஹல்வாரா நோக்கி வந்தபோது நள்ளிரவில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விமானத்தில் இருந்த விமானி அபினவ் சவுத்ரி உயிரிழந்தார். 

விமான விபத்தில் பைலட் உயிரிழந்தையடுத்து, விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது. பைலட்டின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பதாகவும் கூறி உள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாவது மூன்றாவது முறை ஆகும். இதற்கு முன்பு மார்ச் மாதம் நடந்த விபத்தில் குரூப் கேப்டன் உயிரிழந்தார். ஜனவரி மாதம் ராஜஸ்தானில் நடந்த விபத்தின்போது, பைலட் பாதுகாப்பாக வெளியே குதித்து உயிர்தப்பினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com