தேர்தலில் இனி போட்டியிட மாட்டேன்- அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் திடீர் அறிவிப்பு

இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் திடீரென அறிவித்தார்.
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி பிராந்திய பகுதியான ஏனாமில் 25 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ். இதையொட்டி அவரை பாராட்டும் விதமாக ஏனாமில் நேற்று வெள்ளிவிழா நடைபெற்றது.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சாபநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள். இதன்பின் அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் ஏற்புரையாற்றினார்.

விழாவையொட்டி அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவின் வாழ்க்கை வரலாறு குறித்து வீடியோ படம் வெளியிடப்பட்டது. அதில் அவரது வாழ்க்கை வரலாறு, அரசியல் பிரவேசம், ஏனாம் தொகுதிக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட சாதனைகளை விளக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

இதையடுத்து அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் பேசும் வீடியோ திரையிடப்பட்டது. அதில் அவர் பேசுகையில், ‘நான் புதுவை மற்றும் ஏனாம் தொகுதி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். இனி நானோ, எனது குடும்ப உறுப்பினர்களோ யாரும் தேர்தலில் போட்டியிடமாட்டோம்’ என கூறினார். ஏனாமில் நடைபெற்ற வெள்ளிவிழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 11.40 மணிக்கு முடிவடைந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com