சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் இன்று விடுமுறை

சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு
சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை:

நிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இதனால் புயலை எதிர்கொண்டு மக்களை காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் புயல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் புயல் நிலவரத்தை கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com