அரூர் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு அபராதம்

அரூர் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம்
அபராதம்
Published on

 அரூர் கீழ் பாட்சாபேட்டை, மேல் பாட்சாபேட்டை, பெரியார் நகர், வருண தீர்த்தம், திரு.வி.க. நகர், கோவிந்தசாமி நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று  வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்க நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போலீசார் முக்கிய சாலைகளில் தடுப்புகள்  அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விதிமுறையை மீறி வந்தவர்களை தடுத்து நிறுத்தி தேவை இல்லாமல் யாரும் வெளியே  வரவேண்டாம் என்று அறிவுறுத்தினர். ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு ரூ.200 முதல் ரூ.5000 வரை  போலீசார் அபராதம் விதித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com