வேதாரண்யம் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

வேதாரண்யம் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 44) இவருடைய மகள் ஆயக்காரன்புலம் பெண்கள் கல்லூரியில் படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

இந்தநிலையில் ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் கலியமூர்த்தி (21) டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் பகுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சரக துணை கண்காணிப்பாளர் மகாதேவன் பரிந்துரையின்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்இன்ஸ்பெக்டர் பத்மசேகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து கலியமூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com