கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து தொழிற்சாலை ஊழியர் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து தொழிற்சாலை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையை சேர்ந்தவர் நாராயணன் (வயது 40). தொழிற்சாலை ஒன்றில் தனியார் ஒப்பந்ததாரரிடம் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு இந்துமதி (35) என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இவர் மனைவியை பிரிந்து கவரைப்பேட்டையில் தனியாக வசித்து வந்தார். கடந்த ஆண்டு நாராயணனின் தாயாரும் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த நாராயணன், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணனின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com