சட்டவிரோதமாக மது விற்ற 13 பேர் கைது

சட்டவிரோதமாக மது விற்ற 13 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி, சிப்காட் தொழிற்பேட்டை, முனுசாமி நகர் டாஸ்மாக் கடை, எளாவூர் சோதனைச்சாவடி உள்ளிட்ட பல இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மேற்கண்ட இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக கும்மிடிப்பூண்டி காட்டுக்கொல்லைத்தெருவை சேர்ந்த ஆனந்த் (வயது 38),ராஜேந்திரன் (48), நற்குணன் (43), ஜெயபால் (44) உள்ளிட்ட 13 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 263 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com