குஜிலியம்பாறை அருகே விபத்தில் விவசாயி பலி

குஜிலியம்பாறை அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

குஜிலியம்பாறை:

குஜிலியம்பாறை அருகே உள்ள வீரக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 74). விவசாயி. இவர் கடந்த 17-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் குஜிலியம்பாறையில் இருந்து வீரக்கவுண்டன்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அய்யாக்கண்ணூர் என்ற கிராமத்தின் அருகே ராமசாமி வந்தபோது, திடீரென்று நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி நேற்று இறந்தார். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com