கள்ளக்குறிச்சி அருகே தீயில் கருகி மூதாட்டி பலி

கள்ளக்குறிச்சி அருகே கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே வானவரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி பழனியம்மாள் (வயது 85). இவர் தனது கூரை வீட்டில் மண்எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்து விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விளக்கு கீழே விழுந்ததில் பழனியம்மாள் மீது தீ பரவி எரிந்தது. 

இதில் உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் கூரை வீடும் தீப்பிடித்து எரிந்து சேதமானது. இது குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com