வெவ்வேறு சம்பவங்களில் சிறுமி-பட்டதாரி பெண் மாயம்

குன்னம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் சிறுமி மற்றும் பட்டதாரி பெண் மாயமானார்கள். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயம்
மாயம்
Published on

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் பூரணி(வயது 16). சம்பவத்தன்று இவர் தனது பாட்டியை பார்க்க சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. அவரை உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது தாய் மஞ்சுளா, மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் கண்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் குன்னம் அருகே உள்ள சித்தளி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவருடைய மனைவி முத்தம்மாள். இவர்களது மகள் சர்மிளா(21). இவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு தட்டச்சு பயின்று வருவதாகவும், சம்பவத்தன்று வேலைக்காக விண்ணப்பித்து விட்டு வருவதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து மருவத்தூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com