மதுரையில் வாலிபர்களை தாக்கிய 4 பேர் கைது

மதுரையில் வாலிபர்களை தாக்கிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

மதுரை:

மதுரை வைகை வடகரை கருப்பட்டி மண்டபம் பகுதியில் நிலக்கோட்டையை சேர்ந்த முருகன் மகன் கருநாகமூர்த்தி (18) தனது நண்பர் கருப்பசாமியுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அங்கு வந்த புளியந்தோப்பு சுரேஷ் மகன் சுபா கிருஷ்ணன் (18), ஞானஒளி ஆகியோர் கருநாகமூர்த்தியை தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து கருநாகமூர்த்தி மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபா கிருஷ்ணனை கைது செய்தனர்.

வண்டியூர் சமையன் கோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷ் மனைவி ஈஸ்வரி (42). இவர் நேற்று மகனுடன் வெளியே புறப்பட்டுச் சென்றார்.

வண்டியூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சேதுராமன் மகன் கர்லாக்கட்டை என்ற சூரிய பிரகாஷ் (23), சமயன் கோவில் தெருவை சேர்ந்த ராமு மகன் காஞ்சிவனம் (23), காளியம்மன் கோவில் தெரு முத்துப்பாண்டி மகன் விஜய் (23) ஆகியோர் ரமேசை பேச அழைத்ததாக தெரிகிறது.

இதை ரமேசின் மனைவி ஈஸ்வரி தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து ரமேசை தாக்கினர்.

இது குறித்து ஈஸ்வரி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரிய பிரகாஷ், காஞ்சிவனம், விஜய் ஆகியோரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com