

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏல சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க அதிகளவில் வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.140-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.80-க்கும், ரோஜா கிலோ ரூ.100-க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.150-க்கும், செவ்வந்திப்பூ ரூ.130-க்கும், கனகாம்பரம் ரூ.250-க்கும் ஏலம் போனது.
சித்ரா பவுர்ணமியையொட்டி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி கிலோ ரூ.250-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், முல்லைப்பூ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.220-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது.
சித்ரா பவுர்ணமியையொட்டி, பூக்கள் விலை உயர்ந்ததால் பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.