

மணிகண்டம்:
இனாம்குளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் இனாம்குளத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவாரங்காடு ெரயில்வே கேட் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த சத்தார் (வயது 65), வெள்ளக்கண்ணு(55), அவரது மகன் வல்லரசு (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் லாட்டரி சீட்டு விற்றதாக எடமலைப்பட்டி புதூரில் பொன்னரையும் (31), திருச்சி இ.பி. ரோடு பகுதியில் ராஜாவையும் (32) போலீசார் கைது செய்தனர்.