சாத்தூர் அருகே இன்று பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஒரு அறையில் பட்டாசு மருந்துகளிடையே ஏற்பட்ட உராய்வினால் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் திடீரென தீப்பிடித்து வெடிக்கத் தொடங்கியது.
பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
Published on

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான குரு ஸ்டார் பட்டாசு தொழிற்சாலை டி.ஆர்.ஓ உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது.

இந்த பட்டாசு தொழிற்சாலையில் 15-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு அறையில் பட்டாசு மருந்துகளிடையே ஏற்பட்ட உராய்வினால் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் திடீரென தீப்பிடித்து வெடிக்கத் தொடங்கியது.

இதில் அந்த அறையில் வேலை  செய்து கொண்டிருந்த நடுசுரங்குடி சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் ஆரோக்கியராஜ் (வயது 38) என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தீ விபத்து ஏற்பட்ட அறை சேதமடைந்தது.

தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கதிரேசன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com