திருக்கோவிலூர் அருகே பெண் என்ஜினீயர் திடீர் மாயம் - போலீசார் விசாரணை

திருக்கோவிலூர் அருகே பெண் என்ஜினீயர் திடீரென மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் சந்தப்பேட்டையை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் மகள் நிவேதா(வயது 22) என்ஜினீயர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் நிவேதாவை காணவில்லை.

இது குறித்து அவரது தாய் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் குடும்ப நண்பராக பழகி வந்த ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழும் திருக்கோவிலூர் ருத்திரப்பநாயக்கர் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராகுல்(42) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com