எலி மருந்தை சர்க்கரையில் கலந்து சாப்பிட்டு பெண் தற்கொலை

மகன் இறந்த சோகத்தில் எலி மருந்தை சர்க்கரையில் கலந்து சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

போளூர்:

போளூரை அடுத்த மொடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 68), கூலித்தொழிலாளி. இவரின் மனைவி மணி (55). இவரின் மகன் ஒரு வருடத்துக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார். மகன் இறந்ததில் இருந்து தாய் மணி சோகத்தில் இருந்து வந்தார். 

7-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது எலி மருந்தை சர்க்கரையில் கலந்து சாப்பிட்டு விட்டு வாந்தி எடுத்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி உயிரிழந்தார். போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com