குன்னம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி - மழை பெய்ததால் மரத்தடியில் ஒதுங்கியபோது பரிதாபம்

குன்னம் அருகே மழை பெய்ததால் மரத்தடியில் ஒதுங்கி நின்றபோது மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 55). விவசாயி. இவர் நேற்று மாலை பேரளியில் இருந்து பீல்வாடி செல்லும் சாலையில் பெரியாண்டவர் கோவில் அருகில், தனது ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது, அப்பகுதியில் மழை பெய்தது. இதனால் ராமச்சந்திரன் அங்குள்ள மரத்தடியில் ஒதுங்கி நின்றார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com