

கூடலூர்:
கேரளமாநிலம் தேக்கடியில் உள்ள ஏரி பிரசித்திபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தேக்கடிக்கு வருகின்றனர். படகுசவாரி செய்து கொண்டு வனப்பகுதியில் சுற்றித்திரியும் விலங்குகளை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கொரோனா பொதுமுடக்கத்தால் தேக்கடி ஏரி மூடப்பட்டது. அதனைதொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் படகுசவாரி, மலையேற்றம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் எடப்பாலம் தங்கும் விடுதி அருகே வந்த காட்டு யானை ஏரியில் நீச்சலடித்து சென்றது. இதை பார்த்ததும் உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள் அதனை வீடியோ எடுத்தனர். 3 படகுகள் இடையே யானை நீச்சலடித்து எதிர்கரையை சென்றடைந்தது. இந்த காட்சியை புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணிகள் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அவை வைரலாக பரவி வருகிறது.