பணகுடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு

இறந்த யானை 2 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்றும், இறந்த யானைக்கு சுமார் 14 வயது இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
யானை உயிரிழப்பு
யானை உயிரிழப்பு
Published on

பணகுடி:

நெல்லை மாவட்டம் பணகுடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூதப்பாண்டி வனத்தில் வனத்துறையினர் ரோந்து சென்றுள்ளனர். அப்போது ஊருக்கு மேற்கே உள்ள கஞ்சிபாறை என்ற மலைப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டனர்.

இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் இறந்த யானை 2 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்றும், இறந்த யானைக்கு சுமார் 14 வயது இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நெல்லையில் உள்ள கால்நடை மருத்துவ துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கன்னியாகுமரி வன பாதுகாவலர் திலீபன் மற்றும் கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில் மருத்துவ குழுவினர் நெல்லை மருத்துவர் மனோகரன் மற்றும் பணகுடி மருத்துவர் மனோகரன், முத்துகிருஷ்ணன் கொண்ட குழுவின் தலைமையில் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்பு அதே பகுதியில் அடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com