மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

ஸ்ரீகாளஹஸ்தி:

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் பகுதியைச் சேர்ந்தவர் சலீம் (வயது 24). இவர், சித்தூர் மாவட்டம் யாதமரி மண்டலம் மோர்தனாபள்ளியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மார்க்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவரின் கையில் இருந்த இரும்பு அளவுகோல் (ஸ்கேல்) தவறி அருகில் உள்ள மின்கம்பியில் உரசி உள்ளது. அதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சலீம் சம்பவ இடத்திலேயே பலியானார். யாதமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com