

நாமக்கல்:
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையையொட்டி, முட்டை விற்பனை அதிகரித்துள்ளதாலும், மற்ற மண்டலங்களில் விலை தொடர்ந்து உயர்வதாலும், கொரோனா நோய்த் தடுப்புக்கான உணவில் முட்டை முக்கிய பங்கு வகிப்பதாலும் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்துள்ளதாலும் இங்கும் விலையில் மாற்றம் செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில், 30 காசுகள் உயர்வுடன் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.70-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பண்ணையாளர்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ள வேண்டும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.