தாராபுரத்தில் திருட்டு வழக்கில் வாலிபர் கைது

தாராபுரத்தில் திருட்டு வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தாராபுரம்:

தாராபுரம் என்.ஜி.ஜி.ஒ. காலனியை சேர்ந்தவர் வீரமணி. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்று இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த 14½ பவுன்நகையை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து தாராபுரம் போலீசில் வீரமணி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலையில் தாராபுரம் டி.எஸ். கார்னர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தாராபுரம் குளத்து புஞ்சை தெருவைச் சேர்ந்த ஆறுமுகன் மகன் திருமூர்த்தி (வயது 21) என்றும், வீரமணி வீட்டில் 14½ பவுன் நகையை திருடியதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து திருமூர்த்தியை போலீசார் கைது, அவரிடம் இருந்து 14½ பவுன்நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com