விக்கிரமசிங்கபுரம் அருகே கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை

விக்கிரமசிங்கபுரம் அருகே கடன் தொல்லையால், வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 59). பன் உற்பத்தி செய்து வியாபாரம் செய்து வந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏலச்சீட்டும் நடத்தி வந்தார்.

இந்நிலையில் சொந்த வீடு கட்டிய நிலையில் இவருக்கு கடன் அதிகமாகியது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த இவர், பன் உற்பத்தி செய்யும் வீட்டில் வைத்து விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், செல்வராஜ் இறந்து போனதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து அவரது மகன் வரதராஜன், விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com