“தவிர்க்க கூடாதது மாஸ்க்கும்.. சானிடைசரும்..”: விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ரெட் கிராஸ் சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
கொரோனா விழிப்புணர்வு குறித்து திருவிளையாடல் சினிமா வசனம் போல் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம் வழங்கிய காட்சி.
கொரோனா விழிப்புணர்வு குறித்து திருவிளையாடல் சினிமா வசனம் போல் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம் வழங்கிய காட்சி.
Published on

கும்பகோணம்:

கும்பகோணத்தில் ரெட் கிராஸ் சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்து திருவிளையாடல் சினிமா வசனம் போல் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

உச்சி பிள்ளையார் கோவில் அருகில் நடந்த நிகழ்ச்சியில் ‘தவிர்க்கக் கூடாதது மாஸ்க்கும் சானிடைசரும், தவிர்க்க வேண்டியது நெரிசலான கூட்டங்களையும் கூட்டம் சேர்ப்பதையும், பார்க்கக் கூடாதது அச்சப்படுத்தும் வாட்ஸ்அப் மெசேஜ்களை, அச்சப்பட வேண்டியது முக கவசம் அணியாதவர்களைப் பார்த்து, பார்க்க வேண்டியது அரசு வலியுறுத்தும் முறையான வழிமுறைகளை’ என்று திருவிளையாடல் படத்தில் சிவாஜி -நாகேஷ் பேசிய வசனம் போல் பேசி காட்டி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு அதை அச்சடித்து துண்டு பிரசுரமாகவும் பொது மக்களுக்கு வழங்கினர்.

இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ரோசாரியோ பெஞ்சமின் சிவகுமார் ஆகியோர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் முககவசம் அணியாதவர்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com