ராஜாக்கமங்கலம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை

ராஜாக்கமங்கலம் அருகே விஷ மாத்திரைகளை தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே கார்த்திகை வடலியை சேர்ந்தவர் ராஜதுரை. இவருடைய மகள் அபி சக்தி ராணி (வயது 19). இவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் படிப்பை பாதியில் கைவிட்டு வேலைக்கு செல்கிறேன் என அபி சக்தி ராணி, தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மகளின் முடிவுக்கு பெற்றோர் அனுமதி அளிக்கவில்லை என்றும், கண்டிப்பாக படிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அபி சக்தி ராணி விஷ மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com