கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி திடீர் மரணம்

கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி தீடீரென மரணமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை:

ஈரோடு பி.பி.அக்ரகாரம் அன்னை சந்தியா நகரை சேர்ந்தவர் ரவி என்கிர அரக்கன் ரவி (வயது 41). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து ஈரோடு மாவட்ட போலீசார் ஒரு திருட்டு வழக்கில் ரவியை கடந்த அக்டோபர் மாதத்தில் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் அதே மாதம் 17-ந் தேதி கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்த ரவிக்கு நேற்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிறைக்காவலர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com