சித்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

சித்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

ஸ்ரீகாளஹஸ்தி:

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தனகல்லு பகுதியைச் சேர்ந்தவர் சின்னநாகப்பா. இவருடைய மகன் ரெட்டிசேகர் (வயது 24). இவர், தனது நிலத்தில் விளைந்த தக்காளியை ஒரு வேனில் ஏற்றி நேற்று முன்தினம் இரவு சித்தூர் மாவட்டம் முலகலசெருவு அருகில் உள்ள மண்டிக்கு விற்பனைக்காக கொண்டு வந்தார். இரவு 10 மணியளவில் சாலையோரம் வேனை நிறுத்தி விட்டு, உணவு சாப்பிட முலகலசெருவுக்கு நடந்து சென்று ஓரிடத்தில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக எதிரே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் திடீரென ரெட்டிசேகர் மீது மோதியது. அதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை, அப்பகுதியினர் மீட்டு மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். தனகல்லு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com