முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்திப்பு

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று சந்தித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்திப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்திப்பு
Published on

சென்னை:

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று அவரச ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக அரசு சார்பாக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தற்போது சந்தித்தார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச்செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்ற்றுள்ளனர். மேலும் பிரதமர் மோடியுடன் நடந்த கூட்டம் குறித்து முதலமைச்சரிடம் விள்ளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com