கறிக்கோழியின் விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் முடிவுப்படி நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழியின் விலை கிலோ ரூ.90 ஆக அதிகரித்து உள்ளது.
கறிக்கோழி
கறிக்கோழி
Published on

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.88-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.90 ஆக அதிகரித்து உள்ளது.

முட்டை கொள்முதல் விலை 390 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.47 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com