சிறுகனூர் அருகே சுற்றுலா பயணிகளிடம் செல்போன், பணம் பறிப்பு

சிறுகனூர் அருகே சுற்றுலா பயணிகளிடம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சமயபுரம்:

பாண்டிச்சேரியைச் சேர்ந்த அமல்ராஜ் என்பவர் மகன் பிரான்சிஸ் (வயது19). இவர் கேட்டரிங் முடித்து விட்டு அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரும் இவரது நண்பர்கள் சிலரும் ஒரு காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக நேற்று மாலை வந்து கொண்டிருந்தனர்.

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக காரை விட்டு இறங்கிச்சென்றனர். அப்போது பிரான்சிஸ் மற்றும் அவரது நண்பர் ரவீந்திரன் (வயது 20) ஆகிய 2 பேரும் சிறுநீர் கழிப்பதற்காக சாலை ஓரம் சென்றனர்.

அப்போது அவ்வழியே 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் இருவரையும் கத்தியால் கிழித்து விட்டு ஒரு விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.. காயமடைந்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com