கரூரில் தொழிலதிபர் தற்கொலை- போலீசார் விசாரணை

கரூரில் டெக்ஸ்டைல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கரூர்:

கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 37). இவருக்கு திருமணமாகி கலைவாணி (31) என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் டெக்ஸ்டைல் தொழில் செய்து வந்த சதீஷ் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பிரச்சினையில் சிக்கி தவித்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சதீஷ் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெக்ஸ்டைல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com