சிறுவன் பாலியல் வன்கொடுமை- குற்றவாளிக்கு மரண தண்டனை

புதுக்கோட்டை அருகே சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றம்
நீதிமன்றம்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வடமாநிலத்தை சேர்ந்த டேனிஷ் படேல் என்ற நபர் கடந்த 2019-ம் ஆண்டு மனநலம் குன்றிய சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்தார்.

இது தொடர்பாக போலீசார் டேனிஷ் படேல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு இன்று புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நீதிபதி சத்யா தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனநலம் குன்றிய சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் டேனீஷ் படேலுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.  

குஜராத் மாநிலத்தை சேர்ந்த டேனிஷ் படேல் என்பவருக்கு 3 பிரிவுகளின் கீழ் மரண தண்டனையும் ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்க நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com