

மதுரை:
மதுரை விளாங்குடியில் மணிராஜ் என்பவருக்கு சொந்தமான ஜவுளி உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்களுக்கான ஆடை ரகங்கள் உற்பத்தி செய்யும் பணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஜவுளி ஆலை பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதில் அங்கு பணியில் இருந்த ராஜேஸ்வரி (வயது 32) என்பவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக கூடல் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.