போடி அருகே கஞ்சா விற்ற 2 பெண்கள் கைது

போடி அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

போடி:

போடி நகர் போலீசார் நேற்று மாலை குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது தேவாரம் மூனாண்டிபட்டி பட்டறை தெருவை சேர்ந்த செல்வராணி (வயது 47), கோடாங்கிபட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பஞ்சம்மாள் (75) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com