நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சைக்கு முதியவர் உயிரிழப்பு

கருப்பு பூஞ்சைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 20 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கருப்பு பூஞ்சை
கருப்பு பூஞ்சை
Published on

நெல்லை:

கொரோனா தொற்று தற்போது வேகமாக குறைந்து வருகிறது. எனினும் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த ஒரு சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் குன்னக்குடியை சேர்ந்தவர் ராமர் (வயது 72).

கடந்த மாதம் 5-ந்தேதி கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஒரு மாதமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி ராமர் பரிதாபமாக உயிழந்தார்.

ஏற்கனவே கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவரும், கயத்தாறு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது முதியவர் இறந்துள்ளதால் நெல்லையில் கருப்பு பூஞ்சைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. தற்போது கருப்பு பூஞ்சைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 20 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com