ராணிப்பேட்டையில் பைக் மீது வாகனம் மோதி வாலிபர் பலி

ராணிப்பேட்டை அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

ராணிப்பேட்டை:

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது26). இவர் நேற்று மாலை சென்னையில் இருந்து ஆரணி நோக்கி பைக்கில் சென்றார்.

ராணிப்பேட்டை அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தலையில் பலத்த காயமடைந்த வினோத் குமாரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com