நடைபயிற்சிக்கு சென்ற சாராயக்கடை உரிமையாளரை கொல்ல முயற்சி - தந்தை, மகன் மீது வழக்கு

நடைபயிற்சிக்கு சென்ற சாராயக்கடை உரிமையாளரை கொல்ல முயன்ற தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

புதுச்சேரி:

முதலியார்பேட்டை இந்திரா நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 48). இவர் மணவெளி, வில்லியனூர், பாகூர், மதகடிப்பட்டு, கல்மண்டபம் ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியுடன் சாராயக்கடை நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உறுவையாறு பகுதியை சேர்ந்த பழனி என்பவருடன் சேர்ந்து பல பகுதிகளில் சாராயக்கடை நடத்தினார்.

இந்தநிலையில் சாராயக் கடைக்கு கிஸ்தி கட்டுவது தொடர்பாக ஜனார்த்தனன், பழனி இடையே பிரச்சினை ஏற்பட்டது. நேற்று அதிகாலை ஜனார்த்தனன் நடைபயிற்சிக்கு சென்றபோது அவரை கொலை செய்யும் நோக்கில் ஒரு காரில் சிலர் பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சதியில் பழனி, அவரது மகனுக்கு தொடர்பு இருப்பதாக முதலியார்பேட்டை போலீசில் ஜனார்த்தனன் புகார் செய்தார். அதன்பேரில் பழனி, அவரது மகன் கல்யாண் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com