பேரறிவாளன் விடுதலையை அரசு முன்னெடுக்க வேண்டும் - அற்புதம்மாள் கோரிக்கை

பரோலில் வெளியே வந்திருக்கும் பேரறிவாளனை மீண்டும் சிறை செல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறு அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அற்புதம்மாள்
அற்புதம்மாள்
Published on

சென்னை: 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உடல்நலக்குறைவால் பரோலில் வெளியே வந்திருக்கிறார். மகனின் விடுதலைக்காக 30 ஆண்டுகளாக நடத்தி வரும் சட்டப்போராட்டத்தை விட மகனுக்கு தற்போது ஏற்பட்டுள்ள உடல்நல பிரச்சனைகள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக அற்புதம்மாள் வேதனை தெரிவித்துள்ளார்.

இறுதி காலத்தை மகனுடன் செலவிட விரும்புவதாக தெரிவித்துள்ள அவர், மகனை மீண்டும் சிறை செல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உருக்கமாக கூறி இருக்கிறார். 7 பேர் விடுதலைக்கும் பண்முக ஒழுங்கு கண்காணிப்பு முகமை அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை அற்புதம்மாள் சுட்டிக்காட்டி உள்ளார். 

எனவே பரோலில் வெளியே வந்திருக்கும் தனது மகன் பேரறிவாளன் விடுதலையை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com