ஆரணி அருகே பாம்பு கடித்து பெண் பலி

ஆரணி அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

ஆரணி:

ஆரணியை அடுத்த மலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. அவரது மனைவி புவனேஸ்வரி (வயது 30). இவர்களுக்கு அஜய் (7), ராகுல் (5), ரமணா (5) என 3 குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் புவனேஸ்வரியை பாம்பு கடித்துள்ளது.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், புவனேஸ்வரி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com